மீன்முகம் புல்லென வா,,,,,,,,,னா,,,,,,,,,கை தெளிமணி விளக்கு மளிமலர்ப் பள்ளியுட் புலப்பிற் றீரக் கலப்புறு கணவரை முயக்கிடை விடாஅச் சுடர்க்குழை மகளிர் தோண்முதற் புணர்ச்சி யிரியத் துட்கென வாண்முக மழுங்க வலியற வராவும் வைவாள் போலும் வகையிற் றாகி வெள்வேல் விடலையொடு விளங்கிழை மாதர்க்குச் செந்தீக் கதீஇய வெந்தழற் புண்ணினுட் சந்தனச் சாந்திட் டன்ன தண்மையொடு வந்தது மாதோ வைக லின்றென். வைகிய காலை வத்தவ ரிறைவனும் பைவிரி யல்குற் பதுமா பதியும் கண்ணுறக் கலந்த காம வேகம் ஒண்ணிறச் செந்தீ யுண்ணிறைத் தடக்கிய ஊதுலை போல வுள்ளகங் கனற்ற மறுத்தவற் காணும் குறிப்புமனத் தடக்கிப் பண்கெழு விரலிற் கண்கழூஉச் செய்து தெய்வம் பேணிப் பையென விருந்தபிற் பாசிழைச் செலிவியும் பயந்த தாயும் நங்கை தவ்வையும் வந்தொருங் கீண்டிப் படிநலப் பாண்டியங் கடிதூர்ந் துராஅய வையத் திருப்ப மருங்குனொந் ததுகொல் தெய்வத் தானத்துத் தீண்டிய துண்டுகொல் பாடகஞ் சுமந்த சூடுறு சேவடி கோடுயர் மாடத்துக் கொடுமுடி யேற அரத்தக் கொப்புளொடு வருத்தங் கொண்டகொல் அளிமலர்ப் பொய்கையுட் குளிர்நீர் குடையக் கருங்கண் சிவப்பப் பெருந்தோ ணொந்தகொல் யாதுகொ னங்கைக் கசைவுண் டின்றெனச் செவ்வி யறிந்து பையெனக் குறுகி வேறுபடு வனப்பின் விளங்கிழை வையம் ஏறின மாகி யிளமரக் காவினுட் சேறு மோவெனச் சேயிழைக் குரைப்ப

|