சாந்தின் வள்ளி யெழுதிய வயந்தக குமரன் வரைபுரை யகலத் தசைந்த தோள னாகி யொருகையுட் டாரகம் புதைத்த தண்மலர் நறும்பைந் தூழறிந் துருட்டா வொருசிறை நின்றுழிப் பந்தவன் செங்கை பயில்வது நோக்கி அந்தண வுருவொடு வந்தவ ணின்றோன் யார்கொ லவனை யறிதி யோவெனப் பாவை வினவப் பணிந்தவ ளுரைக்கும் அடிகள் போக யானு மொருநாள் ஒடியாப் பேரன் புள்ளத் தூர்தர ஆண முடைத்தாக் கேட்டனெ னவனை மாணக னென்போன் மற்றிந் நாடு காண லுறலொடு காதலின் வந்தோன் மறையோம் பாளன் மதித்தன னாகித் தானுந் தோழருந் தான நசைஇ நின்றனர் போகா ரென்றவட் குரைப்பப் பல்வகை மரபிற் பந்துபுனைந் துருட்டுதல் வல்லவன் மற்றவன் கைவயிற் கொண்டது புறத்தோ ரறியாக் குறிப்பி னுணர்த்தி நமக்கு வேண்டென நலத்தகை கூறக் கண்ணினுங் கையினுங் கண்ணிய துணர்த்திப் பெருந்தகை யண்ண றிருந்துமுக நோக்கி நின்கைக் கொண்ட பூம்பந் தென்கை ஆய்வளைத் தோளிக் கீக்க வென்ன அங்கை யெற்றிச் செங்கணிற் காட்டிய கூன்மகள் குறிப்புத் தான்மனத் தடக்கித் தன்வயிற் றாழ்ந்த தைய னிலைமை இன்னுயிர்த் தோழர்க் கிசைத்தல் வேண்டி மந்திரச் சூழ்ச்சியுள் வெந்திறல் வீரன் வள்ளிதழ்க் கோதை வாசவ தத்தையை உள்வழி யுணரா துழலுமென் னெஞ்சினைப் பல்லிதழ்க் கோதைப் பதுமா பதியெனும் மெல்லியற் கோமகண் மெல்லென வாங்கித் தன்பால் வைத்துத் தானுந் தன்னுடைத் திண்பா னெஞ்சினைத் திரிதலொன் றின்றி என்னுழை நிறீஇத் திண்ணிதிற் கலந்த காம வேட்கைய டானெனக் கூற

|