ர்ப னென்னோ யகலக் கொள்ளி னன்றென வள்ளிதழ்க் கோதை மன்னவன் வைத்த சின்மென் போதுடன் நறுமலர் கமழ்சினை செறியச் சேர்த்தி நெடுந்தோட் செல்ல றீரச் சிறந்தவன் குறுந்தா ரகவயிற் கூடுபு முயங்கிக் குவிமுலைச் சாந்த நவிர்முதற் பொறித்தே இழுமென் காவின தியல்புஞ் செல்வமும் கொழுமலர்த் தடங்கணிற் குலாஅய் நோக்க நண்ணியோர் முன்னர்க் கண்ணியது மறைத்து வண்ணமுகிழுமலருந் தளிரும் நண்ணி யீன்ற நமக்கெனக் கரையா அரும்பெறற் றோழியு மகன்ற செவ்வியுள் விரும்புவன ளாகி விண்ணவர் மருள வத்தவர் கோமான் வித்தகம் புனைந்த இலைவினைக் கம்மத்துப் பலவினை கண்டே தன்முத லாகலிற் சின்னகை முறுவலொடு பொற்பூண் முலைமிசை யப்புபு தடாஅக் கண்ணி கொண்டுதன் சென்னி சேர்த்தி ஒருங்குகலந் தனள்போற் றிருந்தொளி திகழ்ந்து பசப்புமீ தடர்ந்து மிகப்பொலிந் திலங்கத் தன்னமர் தோழியும் பின்னமர்ந் தெய்தி நீயார் நங்கை நின்னே போலுமெம் சேயான் றங்கை செல்வப் பாவை மாயோ டன்னை மலர்த்தகைக் காவினுள் இன்னினிக் கெடுத்தே னன்னவள் கூறிய துன்னருந் தோட்டத்திற் றுளங்குவன ளாகி வேறுபட் டனளென விம்முவன ளிறைஞ்சிக் கூறாது நாணிய குறிப்புநனி நோக்கி நின்கட் கிடந்த நீரணி யேஎர் என்கண் கவற்றிற் றென்றலோ டியலித் தன்னகர் புக்க பின்னர்த் தோழரொடு மன்ன குமரனும் வந்தவட் குறுகத் தண்பூங் கண்ணிகொண்டதன் றாண்முதல் ஒண்பூஞ் சாந்தி னுண்பொறி யொற்றிப் போயினள் புரவலன் பூந்தார் மார்பிற் காகிய பால

|