ளிவளென் றறிந்தே கூறிய கிளவிக் கொத்த தின்றென உறுபுகழ் நண்பி னுருமண் ணுவாவவர்க் கறியக் கூற வங்கை மலர்த்தா வியந்த மனத்த ராகி நிகழ்ந்ததற் கியாப்புறு கரும மாராய்ந் திருந்துழி நீப்பருங் காத னிறைந்துட னாடல் பண்புடைத் தென்றத் தண்டழை யணிந்த காவி னத்த மேவின னாகித் தேர்வனன் றிரிவுழி வார்தளிர் பொதுளிய அருகுசிறை மருங்கி னொருமகள் வைத்த புதுமலர்ப் பிணையலும் புனைநறுஞ் சாந்தமும் கதிர்மணி யாழியுங் கண்டன னாகி வலிகெழு மொய்ம்பின் வயந்தக குமரன் ஒலிகெழு தானை யுதயணற் குய்ப்ப அரும்பெறற் சூழ்ச்சி யவனையும் பின்னிணைப் பெருந்திற லவரையும் பெற்றோன் போல அன்புபுரி பாவை யாடிய பொய்கையுள் நம்புபுரி மன்னனு நயந்தன னாடி உடையு மடிசிலு முருமண் ணுவாவிற்குக் கடனா வைத்தலிற் கைபுனைந் தியற்றி அகன்மடி யவன்றா னமர்ந்து கொடுப்ப வாங்கின னுடுத்துப் பூந்தண் சாந்தம் எழுவுறழ் தோளு மகலமு மெழுதிப் புனையிருங் குஞ்சித் தோட்டுக் கிடையே துணைமலர்ப் பிணைய றோன்றச் சூடிச் சுடர்மணி யாழி படைபயின்று பலித்த செறிவிர லங்கையின் மறைவுகொள வைத்துக் கழுநீர் நறும்போ துளர்த்துபு பிடித்து மறங்கெழு வேந்தனு மம்மர் தீரப் போந்த பொழுதி னேந்துநிலை மாடத்துப் பக்க நின்ற பொற்பூங் கோதையும் கண்ணுற நோக்கிச் சின்னகை முகத்தினள் கண்ணிற் கூட்டமு மன்றி நம்முட் கண்ணிய மாயினங் கவல லென்றுதன் நெஞ்சி னகத்தே யஞ்சில மிழற்றிக் குன்றாக் கோயில் சென்றவள் சேர்ந்தபின் தனக்கவ ளுரிமை பூண்டமை தமர்களைச் சினப்போர் மதலை

|