பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   278
Zoom In NormalZoom Out


 

செவ்வன் றேற்றிப்
பள்ளி கொண்ட நள்ளிருள் யாமத்துப்
போரடு தறுகண் பொருந்தலும் பொருக்கென
நீருடை வரைப்பி னெடுமொழி நிறீஇய
பிரியாப் பெருக்கத்துப் பிரச்சோ தனன்மகள்
அரியார் தடங்க ணதிநா கரிகி
மணியிருங் கூந்தன் மாசுகண் புதைப்பப்
பிணியொடு பின்னி யணிபெறத் தாழ்ந்து
புல்லெனக் கிடந்த புறத்தள் பொள்ளென
நனவிற் போலக் காதலன் முகத்தே
கனவிற் றோன்றக் காளையும் விரும்பி
மாசில் கற்பின் வாசவ தத்தாய்
வன்க ணாளனேன் புன்கண் டீர
வந்தனை யோவென வாய்திறந் தரற்றப்
பைந்தளிர்க் கோதை பையென மிழற்றி
ஏதில னன்னாட் டெற்றுறந் திறந்தனை
காதலர் போலுங் கட்டுரை யொழிகெனக்
குறுகா ளகறொறு மறுகுபு மயங்கி
நிற்பெயர்ப் பாள னிப்பதி யுளனெனக்
கற்பயில் பழுவங் கடந்தியான் வந்தனென்
வெகுள னீயெனத் தவளையங் கிண்கிணிச்
சேவடி சேர்ந்து செறியப் பற்றி
வென்றடு குருசில் வீழ்ந்தன னிரப்ப
மதுநாறு தெரியன் மகதவன் றங்கை
பதுமா பதிவயிற் பசைந்தவள் வைத்த
கோதையுஞ் சாந்துங் கொண்டணிந் தனையென
மாதர்த் தேவி மறுத்து நீங்கத்
தண்மலர்ப் படலைத் தருசகன் றங்கை
பன்மலர்க் கோதைப் பதுமா பதியெனும்
பேருடை மாத ருளண்மற் றென்பது
நேரிழை யரிவை நின்வாய்க் கேட்டனென்
இன்னவும் பிறவுங் கூறி மற்றென்
நன்னர் நெஞ்ச நாடுவை நீயெனப்
பின்னரு மிக்குப் பெருமக னிரப்ப
மடங்கெழு மாதர் மறைந்தன ணீங்கக்
கடுங்கதிர்க் கனலி கால்சீ்த் தெழுதர
விடிந்தது மாதோ வியலிருள் விரைந்தென்.