வேந்தனைத் தம்மிற் றீர்த்து வெம்முரண் வென்றி மகதவன் றங்கை மணிப்பூண் வனமுலை நுகர விட்டனர் நுண்ணறி விலரெனின் ஏத மதனா னிகழ்பவை யிவையென நீதியிற் காட்ட நெடுந்தகை யண்ணல் வேண்டா மற்றிது மாண்டகைத் தன்றென மற்றவள் புகுதரு மாடம் புகினே குற்றம் படுவ கூறக் கேண்மதி காவ லாளர் கடுகுபு வந்தகத் தாராய்ந் தெதிர்ப்ப ரருநவை யுறாது போரார் குருசில் போதர வுண்டெனின் உருவ மாதர் பெருநலம் பெறுதி நன்றா வெய்தும் வாயி லவருனை என்றே யாயினு மிரவல னென்னார் வேண்டா வதுவென விதியிற் காட்டி மாண்ட தோழர் மன்னவன் றன்னை மறுத்த வாயிலொடு வலிப்பனர் கூற நிறுக்க லாற்றா நெஞ்சின னாகி வத்தவர் பெருமக னுத்தர நாடி அடுமுர ணீங்கி யறுபது கழிந்தோர் கடுவெயில் வந்த காவ லாளர்கண் மருள்படு வல்லறை மருங்கணி பெற்ற இருள்படு மாதலி னெற்காண் குறுதல் அரிய தவர்க்கெனத் தெரியக் காட்டி வெற்ற வேலான் மற்றுங் கூறினன் தனக்குநிக ரின்றித் தான்மேம் பட்ட வனப்பின் மேலும் வனப்புடைத் தாகிக் கலத்தொடு கவினிக் கண்கவர் வுறூஉம் நலந்தகு தேற னாணா டோறும் தலைப்பெரும் புயலாத் தனக்குநசை யுடையதைக் குலனுஞ் செல்வமு நலனு நாணும் பயிர்ப்பு முட்கு மியற்கை யேரும் மடனு மன்பு மாசில் சூழ்ச்சியும் இடனுடை யறிவு மென்றிவை பிறவும் ஒல்காப் பெரும்புகழ்ச் செல்வ முடைய

|