. .. . . . . ... ... .. . .வணி தோங்கி ஆரணங் காகிய வகல்விசும் புகக்கும் தோரண வாயி றுன்னின னாகி அருமொழி யுணரும் பெருமொழி யாளனைத் தாக்கருந் தானைத் தருசக குமரன் வேட்கும் விச்சை யாதென வினவப் பயந்தோன் படைத்த படைப்பரும் வெறுக்கை இருந்துழி யிசையா னிகந்தயர்த் தொழிந்தனன் அன்னவை யறிந ருளரெனி னவர்கட் கின்னுயி ராயினுமீவ னவனென மன்னவன் மனத்தை யெல்லா மதித்து நன்மூ தாளன் பன்னினன் மொழிய வாரி மருங்கற வற்றினு மகவயின் நீர்வளஞ் சுருங்கா நெற்றித் தாரைக் கூவலும் பொய்கையுங் கோயில் வட்டத் தெவ்வழி வேண்டினுமவ்வழிக் காட்டும் ஞான வல்லியத் தரும்பொரு ணுனித்தனென் ஏனை நூற்கு மேதில னல்லேன் கரந்துழி யறிய வருங்கல வெறுக்கை வைத்துழிக் காட்டும் வாய்மொழி விச்சை கற்றுக்கை போகிக் காணவும் பட்டது கொற்றவ னிவற்றுக் குறையொன் றுடையது காணவு மமையுங் காணா னாயினும் காவ லாளனைக் கட்பட லுறுவேன் காட்டுதல் குறையெனக் கேட்டவன் விரும்பி நல்லவை நாப்பட் செல்வனைச் சேர்ந்தவன் வல்லவை யெல்லாம் வலிதிற் கூறக் கற்றோர்க் காண்ட லாகுங் காவலிற் பெற்ற பயனென வெற்ற வேந்தனும் காண்பது விரும்பி மாண்பொடு புணர்ந்த பேரத் தாணிபிரித்த பின்றை நேரத் தாணி நிறைமையிற் காட்டலிற்

|