பகையறு குருசிலைப்பண்டுபயின் றன்ன உவகை யுள்ளமொ டொழுக்க மறாது கண்ணினுங் கையினு மன்றிநாவின் இன்னுழி யிருக்கென விருந்த பின்றைக் கற்றவை யெல்லாந் தெற்றென வினாஅய்த் தானே கேட்டு வியந்துதலை துளக்கி ஆனாக் கட்டுரை கழிந்தபின் மேனாட் டள்ளா வென்றித் தம்மிறை வைத்த விள்ளா விழுப்பொரு ளுள்வழி யுணரா மன்னவன் மற்றிது நின்னி னெய்துவேன் கற்றறி விச்சையிற் காட்டுதல் குறையென உற்றன னுரைப்ப வுள்வழிந் தெரிந்து தான்வைத் தனன்போற் காட்டலிற் றருசகன் ஆனாக் காதலொ டாருயி ரன்ன தோழ னாகித் தோன்றா தோற்றும் ஞான நவின்ற நல்லோ னிவனென எனைத்திவன் வேண்டினுமீவ னென்றுதன் கணக்குவினை யாளரொடு கரண மொற்றி அகத்தே யுறைகென வமைத்த பின்னர் எப்பான் மருங்கினு மப்பா னாடி அகத்துநீ ருடைய வதனது மாட்சி மிகுத்தநூல் வகையின் மேவரக் காட்டக் கன்னியங் கடிநகர் காணவா வுடைய இளமரக் காவினுள் வளமைத் தாய நீர்நல னுணர்ந்து சீர்நலக் குருசிற் கெழுகோ லெல்லையு ளெழுமிது நீர்மற் றன்றியு மதனது நன்றி நாடின் நாவிற்கு மினிதாய்த் தீதற வெறியும் தண்மையு நுண்மையுந் தமக்கிணை யாவன தெண்ணீ ரெவ்வழித் தேரினு மில்லை புகழ்வரை மார்பிற் பூந்தா ரண்ணல் அகழும் பொ

|