ழுதி னிகழ்வ கேண்மதி இருமுழத் தெல்லையுள் வரிமுகம் பொறித்த பொன்னிறத் தேரை போதரும் பின்னர் மும்முழத் தெல்லையுட் டெண்ணிறங் குயின்றது தோற்ற மினிதாய் நாற்ற மின்னாப் பருமண லுண்டது பண்ணுநர் வீழ உட்கா ழீன்ற வொருகோ லரையின் எட்பூ நிறத்தொடு கட்கா முறுத்தும் விளங்கறல் வெள்ளியின் வீசுறு மென்றதன் அகம்புக் கனன்போ லகன்ற ஞானத்தின் உண்ணெறிக் கருத்தி னண்ணிய தாகிய மண்ணின் சுவையு மின்னதென் றொழியா துரைப்பக் கேட்டே யோங்கிய பெரும்புகழ்த் திருப்பே ருலகம் பெற்றோன் போல அகழ்வினை யாளரை யவ்வயிற் றரீஇ இகழ்வி லத்தொழி லிறைவ னேவப் பெருமண் வேந்தனைப் பிழைப்பின் றோம்புதற் குருமண் ணுவாவு முள்ளகத் தொடுங்க வாய்மொழி யிசைச்சனும் வயந்தக குமரனும் தேமொழி மாதர் தாய்முதற் கோயிலுள் தரும நூலுந் தந்துரை கதையும் பெருமுது கிளவியொடு பிறவும் பயிற்றி நங்கை விழையு நாளணி கலங்கள் கொங்கணி மலரிற் கூட்டுவன ருய்த்துச் சென்றுவந் தாடல் செய்வது வலிப்பப் பிறவுறு தொழிலொடு மறவோ ரெல்லாம் ஆய்புக ழரசனை யற்றப் படாமற் காவல்புரிந் தனராற் கடிமனைக் கரந்தென்.

|