கரந்த வுருவொடு காவல் புரிந்தவர் ஒடுங்குதல் வலித்துடன் போகிய பின்றை முனைவெந் துப்பின் மன்னனு முன்போல் புனைவகை மாடம் புக்குமறைந் திருத்தலின் தண்டடு திண்டோட் குருசிலைத் தன்னொடு கொண்டுட் போகுங் குறிப்பின ளாகித் தீது தீண்டாத் தெரிவொடு புகுதரும் வாயி னாடி வைய நீக்கிப் பல்வகைத் தான நல்குக மின்றென எல்லிற் போதர லியையு மாதலிற் சிலத மாக்களொடு சிவிகை வருகென அலர்ததை யைம்பா லணியிழை யேறிப் போந்தன ளாகிப் பூந்தண் கானத்துள் எழுதுவினை மாடத்து முழுமுத லிழிந்து தாமகத் திருக்கு மாமணிப் பேரறை வாயில் சேர்வுற வையம் வைக்கென அமைத்தன ளாகி யவ்வயி னொடுங்கிய சினப்போ ரண்ணலொடு வளப்பா டெய்தி அப்பகல் கழிந்த பின்றை மெய்ப்பட மாண்டகு கிளவி பூண்ட நோன்பிற் கன்றுகடை யாதலிற் சென்றோர் யார்க்கும் மணியு முத்தும் பவழமு மாசையும் அணியு மாடையு மாசி லுண்டியும் பூவு நானமும் பூசுஞ் சாந்தமும் யாவை யாவை யவையவை மற்றவர் வேண்டே மெனினு மீண்ட வீசலின் இந்நில வரைப்பிற் கன்னியர்க் கொத்த ஆசி லாசிடை மாசில மாண்பின் மந்திர நாவி னந்த ணாளரும் அல்லோர் பிறருஞ் சொல்லுவனர் போயபின் கோலக் காமன் கோட்டத் தகவயின் மாலை யாமத்து மணிவிளக் கிடீஇ மோகத் தான முற்றிழை கழிந்த பின் மரபறி மகளிர் பற்றினர் பாடக் கரு

|