பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   285
Zoom In NormalZoom Out


 

ம மமைந்தபிற் கடிமனை புகீஇயர்
திருமதி முகத்தியைச் சேர்ந்து கைவிடாஅ
அருமதி நாட்டத் தந்தணி போந்து
பட்டினிப் பாவை கட்டழ லெய்தும்
நீங்குமி னீரெனத் தான்புற நீக்கிப்
பஞ்சி யுண்ட வஞ்செஞ் சீறடி
ஒதுங்க விடினும் விதும்பும் வேண்டா
வாயிலுள் வைத்த வண்ணச் சிவிகை
ஏற னன்றெனக் கூறி வைத்தலின்
மணங்கமழ் மார்பன் மாடப் பேரறை
இருந்தன னாங்குப் பொருந்துபு பொருக்கெனக்
கட்டளைச் சிவிகையுட் பட்டணைப் பொலிந்த
பூம்பட மறையப் புக்கன னொடுங்க
வண்டொடு கூம்பிய மரைமலர் போல
ஒண்டார் மார்பனை யுட்பெற் றுவகையின்
மணிவரைச் சாரன் மஞ்ஞை போல
அணிபெற வியலி யடிக்கல மார்ப்பத்
தொய்யில் வனமுலைத் தோழி மாரொடு
பையப் புக்குப் பல்வினைக் கம்மத்துச்
சுருக்குக் கஞ்சிகை விரித்தனர் மறைஇப்
பள்ளிப் பேரறைப் பாயலு ளல்லது
வள்ளிதழ்க் கோதையை வைக்கப் பெறீரென
யாப்புறக் கூறிக் காப்போர் பின்செல
வலிகெழு மொய்ம்பிற் சிலத மாக்கள்
அதிர்ப்பி னுசும்ப மதிற்புறம் பணிந்த
காவும் வாவியுங் காமக் கோட்டமும்
பூவீழ் கொடியிற் பொலிவில வாக
வாழ்த்துப்பலர் கூறப் போற்றுப்பல ருரைப்ப
வழுவில் கொள்கை வான்றோய் முதுநகர்
மணியுமிழ் விளக்கின் மறுகுபல போகிக்
கொடியணி கோயில் குறுகலும்