படியணி பெருங்கடை காவலர் பெருமான் றங்கை கருங்கடை மழைக்கட் கனங்குழைப் பாவை முடித்த நோன்பி னெடித்தவகை யறியார் இருளின் குற்றங் காட்டி நங்கை தன் உரிமையுள் படுநரைக் கழறுவன ராகி முழுநிலைக் கதவ மகற்றிமுன் னின்று தொழுத கையர் புகுதுகென் றேத்த வாயில் புக்குக் கோயில் வரைப்பிற் கன்னி மாடத்து முன்னறை வைத்தலின் பகலே யாயினும் பயிலா தோர்கள் கவலை கொள்ளுங் கடிநிழற் கவினி மாடெழு மைந்தரு மூடு சென்றாடா அணியிற் கெழீஇ யமர ராடும் பனிமலர்க் காவின் படிமைத் தாகி இருளொடு புணர்ந்த மருள்வரு மாட்சித் தன்னகர் குறுகித் துன்னிய மகளிரை அகல்க யாவிரு மழலு மெனக்கெனத் திலக முகத்தி திருந்துபடந் திறந்து கூன்மகள் வீச வானா வகத்தே தக்க வெல்லை யிரத்தலின் மிக்க காழகி னறும்புகை யூழ்சென் றுண்ட மணிக்காற் கட்டிலுள் வல்லோள் படுத்த அணிப்பூஞ் சேக்கை யறைமுத லாகப் பக்கமுந் தெருவும் புக்கமுறை பிழையா தாராய்ந் தந்தணி யமைத்ததன் பின்றைப் பேரிசை யண்ணலும் பெருநல மாதரும் ஆரிருள் போர்வை யாக யாவரும் அறிதற் கரிய மறையரும் புணர்ச்சியொடு கரப்பறை யமைத்துக் கைபுனைந் தோர்க்கும் உரைக்க லாகா வுறுபொறிக் கூ

|