பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   287
Zoom In NormalZoom Out


 

ட்டத்துப்
புதவணி கதவிற் பொன்னி்ரை மாலை
மதலை மாடத்து மறைந்தொடுங் கினரென்.
மதலை மாடத்து மடமொழி மாதரொ
டுதயண குமர னொடுங்கிய வுவகையன்
விண்ணுறை தேவரும் விழையும் போகத்துப்
பெண்ணுறை யுலகம் பெற்றோன் போலவும்
நோக்கருங் கதிரவ னீக்கம் பார்த்துப்
பைங்கதிர் விரிக்கும் பனிமதிக் கிழவன்
அங்கண் ஞாலத் தளவை யாகிய
பன்னாட் பக்கஞ் செல்லாது சின்னாள்
வெண்முக நிலாவொளி சுருங்க மெல்லென
உண்மகி ழுரோணியொ டொளித்தது போலவும்
திகழ்மணி மார்ப னகநக ரொடுங்கப்
பொருள்புரி யமைச்சர் புறநகர் கரப்புழி
இருளறு நுண்மதித் தோழியை யெழுதெனக்
கோயில் வட்டமுங் கோணப் புரிசையும்
வாயின் மாடமும் வஞ்சப் பூமியும்
இலவந் திகையு மிளமரக் காவும்
கலவம் புகலுங் கான்கெழு சோலையும்
உரிமைப் பள்ளியு மருமைக் காப்பிற்
படைக்கலக் கொட்டிலும் புடைக்கொட் டாரமும்
நடைப்பெரு வாயிலு முடைக்குறும் புழையும்
அவைமண் டபமு மாடம் பலமும்
வகைமாண் டெய்வம் வழிபடு தானமும்
குதிரைப் பந்தியு மதிர்த லானா
யானைத் தானமுந் தானைச் சேக்கைபும்
எயில தகற்றமு மயில்விளை யாடும்
சுதைவெண் குன்றமும் புதையிருட் டானமும்
உடையன வெல்லா முள்வழி