யுணர்ந்து தெளிதல் செல்லாத் தெவ்வ னிவனெனின் அளியியற் செங்கோ லரசுமுதல் வவ்வலும் எளிதெனக் கென்னு மெண்ணின னாகிப் பெண்பாற் சூழ்ச்சியிற் பிழைப்புப் பலவெனும் நுண்பா னூல்வழி நன்கன நாடின் ஏத மில்லை யிதுவெனத் தேறி மாதர் மாட்டு மகிழ்ச்சியொடு தெளிதல் நீதி யன்றென நெஞ்சத் தடக்கிச் செருக்கிய னெடுங்கண் செவ்வி பெற்றாங் குரத்தகை யண்ண லுறைவது வலிப்பத் தவ்வை யாயினுந் தாயே யாயினும் செவ்வி யறியார் சென்றுமெய் சாரிற் காட்டக் காணாள் கதம்பா டேற்றி வாட்கட் பாவை மருவற் கின்னாக் காட்சிய ளாகிக் கருதுவ தெதுவெனின் வீயா நண்பின் வேத மகளுழை யாழும் பாட்டு மவைதுறை போகக் கற்றல் வேண்டு மினியெனக் கற்பதற் கன்புடை யருண்மொழி யடைந்தோ ருவப்ப நன்பல பயிற்றிய நாவின ளாகி அமிழ்தி னன்ன வறுசுவை யடிசிலும் இவணே வருக வின்று முதலெனத் தமர்வயி னேய தன்மைய ளாகி மழையயா வுயிர்க்கும் வான்றோய் சென்னி இழையணி யெழுநிலை மாடத் துயரறை வாள்வரி வயமான் மூரி நிமிர்வின் நிலைக்கா லமைந்த நிழறிகழ் திருமணி கயிற்குரல் வளைஇய கழுத்திற் கவ்விய பவழ விழிகைப் பத்திக் கட்டத்துப் பட்டுநிணர் விசித்த கட்டமை கட்டிலுட் பொழுதிற் கொத்த தொழில வாகி எழுதுவினைப் பொலிந்த விழுது

|