பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   289
Zoom In NormalZoom Out


 

றழ் மென்மைய
முறைமையி னடுத்த குறைவில் கோலமொடு
நிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணைப்
பரப்பிற் கொத்த பாய்காற் பிணைஇ
அரக்குவினைக் கம்மத் தணிநிலைத் திரள்காழ்
ஒத்த வூசி குத்துமுறை கோத்த
பவழ மாலையும் பன்மணித் தாமமும்
திகழ்கதிர் முத்தின் றெரிநலக் கோவையும்
வாய்முத றோறுந் தான்முத லணிந்த
அந்தண் மாலையு மகடுதோ றணவரப்
பைம்பொற் புளகம் பரந்துகதி ரிமைப்ப
ஐவே றுருவின் மெய்பெறப் புனைந்த
பொய்வகைப் பூவும் வையெயிற் றகல்வாய்
மகரத் தங்கண் வகைபெறப் போழ்ந்த
காம வல்லியுங் களிறும் பிடியும்
தேமொழிச் செவ்வாய்த் திருமகள் விரும்பும்
அன்ன வீணையு மரிமா னேறும்
பன்மரக் காவும் பாவையும் பந்தியும்
பறவையும் பிறவு முறநிமிர்ந் தோவா
நுண்ணவாப் பொலிந்த கண்ணவா வுறூஉம்
மீமிசைக் கட்டின் வாய்முதற் றாழ்ந்த
வண்ணப் படாஅங் கண்ணுறக் கூட்டிப்
பைங்கருங் காலிச் செங்களி யளைஇ
நன்பகற் கமைந்த வந்துவர்க் காயும்
இருங்கண் மாலைக்குப் பெரும்பழுக் காயும்
வைகறைக் கமையக் கைபுனைந் தியற்றிய
இன்றே னளைஇய விளம்பசுங் காயும்
பைந்தளி ரடுக்கும் பலமுத லாகிய
மன்பெரு வாசமொடு நன்பல வடக்கிய
பயில்வினை யடப்பையொடு படியகந் திருத்தி
உருவொடு புணர்ந்த வுயரணை மீமிசை
இருபுடை மருங்கி