பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   290
Zoom In NormalZoom Out


 

னு மெழில்பட விரீஇ
ஏமச் செவ்வி யேஎர் நுகரும்
யாமத் தெல்லையுண் மாமறைப் பேரறை
உலாவு முற்றத் தூழ்சென் றாட
நிலாவிரி கதிர்மணி நின்று விளக்கலும்
பள்ளி தன்னுள் வள்ளிதழ்ப் போதையொடு
மன்னய முரைத்து நன்னலங் கவர்ந்து
வித்தக ரெழுதிய சித்திரக் கொடியின்
மொய்த்தலர் தாரோன் வைத்துநனி நோக்கிக்
கொடியின் வகையுங் கொடுந்தாண் மறியும்
வடிவமை பார்வை வகுத்த வண்ணமும்
திருத்தகை யண்ணல் விரித்துநன் குணர்தலின்
மெய்பெறு விசேடம் வியந்தன னிருப்பக்
கைவளர் மாதர் கனன்றுகனன் றெழுதரும்
காம வேகந் தான்மிகப் பெருகப்
புலவி நெஞ்சமொடு கலவியுட் கலங்கிப்
புல்லுகை நெகிழப் புணர்வுநனி வேண்டாள்
மல்லிகைக் கோதை மறித்தன ளிருந்து
சூட்டுமுகந் திருத்தி வேட்டுநறு நீரின்
மயிரு மிறகுஞ் செயிரறக் கழீஇக்
கோனெய் பூசித் தூய்மையு ணிறீஇப்
பாலுஞ் சோறும் வாலிதி னூட்டினும்
குப்பை கிளைப்பறாக் கோழி போல்வர்
மக்க ளென்று மதியோ ருரைத்ததைக்
கண்ணிற் கண்டே னென்று கைந்நெரித்
தொண்ணுதன் மாத ருருகெழு சினத்தள்
தம்மால் வந்த தாங்கரும் வெந்நோய்
தம்மை நோவ தல்லது பிறரை
என்னது நோவ லேத முடைத்தெனக்
கருங்கே ழுண்கண் கயலெனப் பிறழ்ந்து
பெருங்கயத் தாமரைப் பெற்றிய வாகத்
திரு