பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   291
Zoom In NormalZoom Out


 

நுதல் வியர்ப்பெழுந் திருநிலத் திழிதர
நிலாவுறு திருமுக நிரந்துடன் மழுங்கிக்
கருமயி ரிவர்ந்து காண்டகக் குலாஅய்ப்
புருவம் பலகால் புடைபுடை பெய
முத்துற ழாலி தத்துவன தவழ்ந்து
பொன்னிறக் குரும்பை தன்னிற மழுங்கத்
தன்னிறங் கரப்பத் தவாஅ வெம்மையொடு
வீழனல் கடுப்ப வெய்துயிர்த் தலைஇக்
காதல்செய் கலங்கள் போதொடு போக்கி
அந்தண் சாந்த மாகத்துத் திமிர்ந்து
பண்புரை கிளவி பையெனத் திரியக்
கரும்பேர் கிளவி கதிர்முகை முறுவற்
பெருந்தடங் கண்ணி பிழைப்பொன் றுணரேன்
வருந்தல் வேண்டா வாழிய நங்கையென்
றிரந்தன னாகி யேற்பக் காட்டிய
இலம்புடை நறுமல ரெழுதுகொடிக் கம்மத்துச்
சிலம்பிடைத் தங்கிய சேவடி யரத்தம்
காரிருங் குஞ்சி கவின்பெறத் திவள
அரவுவாய்க் கிடப்பினு மலர்கதிர்த் தண்மதிக்
குருவுக்கதிர் வெப்ப மொன்று மில்லை
சிறியோர் செய்த சிறுமையுண் டெனினும்
தரியாது விடாஅர் தாநனி பெரியோர்
என்பது சொல்லி யெழில்வரை மார்பன்
பொன்புனை பாவை புறக்குடை நீவிச்
செங்கையிற் றிருத்திப் பைந்தோ டணிந்து
கலம்பல திருத்தி நலம்பா ராட்டிச்
சாந்த மெழுகிச் சாயனெகிழ் பறிந்து
பூம்புறங் கவவப் புனைதா ரோதி
பூண்ட பூணொடு பொறையொன் றாற்றேன்
தீண்டன்மின் பெருமவெனத் தீரிய வுரைத்து
மாடத் தகத்தி லாடுவினைக் காவினுட்
கொம்பர் மீமிசைக் கூகைவந் துலாஅய்
வித்தகக் கை