பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   292
Zoom In NormalZoom Out


 

வினைச் சத்தி யேறி
உட்குத்தக வுரைத்தலுங் கட்கின் பாவை
நெஞ்சந் துட்கென நெடுவிடை நின்ற
காற்றெறி வாழையி னாற்ற நடுங்கி
அஞ்சி லோதி யாகத் தசைத்தர
அச்ச முயக்க நச்சுவனன் விரும்பி
மெல்லியன் மாதரொடு மேவன கிளந்து
புல்லியுந் தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும்
அல்குலு மாகமு மாற்றநலம் புகழ்ந்தும்
அமர ராக்கிய வமிழ்தெனக் கினையோள்
தன்முளை யெயிற்றுநீர் தானென வயின்றும்
ஒழுகா நின்ற காலை யொருநாள்
இன்பப் பேரறை நன்பகற் பொருந்தி
அருமறை யறிதற் கமைந்த வார்வத்
தொருதுணைத் தோழியை யொன்றுவனள் கூவித்
திருவிற் கமைந்த தேந்தார் மார்பன்
உருவிற் கமைந்த வுணர்வுநன் குடைமை
அளத்து நாமெனத் துளக்கிலள் சூழ்ந்து
பலர்புகழ் மார்பன் பயின்ற விச்சைகள்
வல்லவை யாய்கென வழிபா டாற்றி
நல்லவை யாவென நகைக்குறிப் பூர்தர
வினவிய மகளிர்க்குச் சினவுநர்ச் சாய்த்தவன்
வேத விழுப்பொரு ளோதின ருளரெனின்
எனைத்துங் கரவேன் காட்டுவென் யானென
எமக்கவை யென்செயு மிசையொடு சிவணிய
கருவிக் கரண மருவினை யோவென
நீத்தவர் வேண்டிய துப்புர வல்லால்
பார்ப்பன மக்கள் பரிந்துபிற பயிற்றார்
வேள்விக் குரிய கருவி யாவும்
வாளேர் கண்ணி வல்லேன் யானென
நல்லதொன் றுண்டெனிற் சொல்லலெங் குறையென