பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   293
Zoom In NormalZoom Out


 

த்
தோளுறு துணைவிக்குத் துயரம் வந்தநாள்
சூளுறு கிளவியிற் றொழுதனள் கேட்ப
இடவரை யருவியி னிம்மென விசைக்கும்
குடமுழ வென்பது பயிற்றினென் யானென
அவைக்குரி விச்சை வல்ல வந்தணன்
சுவைத்தொழின் மகனென நகைத்தொழி லாடி
அந்தர மருங்கி னமர ராயினும்
மந்திர மறப்ப மனநனி கலக்கும்
பைந்தொடி பயிற்றும் பண்யாழ் வருகெனத்
தந்துகைக் கொடுக்கலுந் தண்பூங் கொடிபோல்
எதிர்முகம் வாங்கி யெழினி மறைஇப்
பதுமா நங்கையும் பையெனப் புகுந்து
கோன்மணி வீணை கொண்டிவ ணியக்கத்
தான மறிந்தி யாப்பி யாயினி
நீநனி பாடென நேரிழை யருளித்
துணைவன் முன்னதன் றொன்னலந் தோன்றக்
கணைபுணர் கண்ணி காட்டுதல் விரும்பி
ஒள்ளுறை நீக்கி யொளிபெறத் துடைத்து
வன்பிணித் திவவு வழிவயி னிறுத்த
மெல்விர னோவப் பல்கா லேற்றி
ஆற்றா ளாகி யரும்பெறற் றோழியைக்
கோற்றேன் கிளவி குறிப்பிற் காட்டக்
கொண்டவள் சென்று வண்டலர் தாரோய்
வீணைக் கேற்ப விசையொடு மற்றிவை
தானத் திரீஇத் தந்தீ கெமக்கெனக்
குலத்தொடும் வாராக் கோறரும் விச்சை
நலத்தகு மடவோய் நாடினை யாகின்
அலைத்தல் கற்றல் குறித்தேன் யானென
மற்போர் மார்பவிது கற்கல் வேண்டா
வலியி னாவது வாழ்கநின் கண்ணி
தரித்தர லின்றிய விவற்றை யிவ்விடத்
திருத்த லல்லது வே