பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   294
Zoom In NormalZoom Out


 

ண்டலம் யாமென
அன்ன தாயி னாமெனிற் காண்கம்
பொன்னிழை மாதர் தாவெனக் கொண்டு
திண்ணிய வாகத் திவவுநிலை நிறீஇப்
பண்ணறி வுறுத்தற்குப் பையெனத் தீண்டிச்
சுவைப்பட நின்றமை யறிந்தே பொருக்கெனப்
பகைநரம் பெறிந்து மிகையுறப் படூஉம்
எள்ளற் குறிப்பினை யுள்ளகத் தடக்கிக்
கோடும் பத்தலுஞ் சேடமை போர்வையும்
மருங்குலும் புறமுந் திருந்துதுறைத் திவவும்
விசித்திரக் கம்மமு மசிப்பில னாகி
எதிர்ச்சிக் கொவ்வா முதிர்ச்சித் தாகிப்
பொத்தகத் துடையதாய்ப் புனனின் றறுத்துச்
செத்த தாருச் செய்தது போலும்
இசைத்திற னின்னா தாகிய திதுவென
மனத்தி னெண்ணி மாசற நாடி
நீட்டக் கொள்ளாண் மீட்டவ ளிறைஞ்சிக்
கொண்ட வாறுமவன் கண்ட கருத்தும்
பற்றிய வுடனவ னெற்றிய வாறும்
அறியா தான்போன் மெல்ல மற்றதன்
உறுநரம் பெறீஇ யுணர்ந்த வண்ணமும்
செறிநரம் பிசைத்துச் சிதைத்த பெற்றியும்
மாழை நோக்கி மனத்தே மதித்தவன்
அகத்ததை யெல்லா முகத்தினி துணர்ந்து
புறத்தோ னன்மை திறப்படத் தெளிந்து
தாழிருங் கூந்தற் றோழியைச் சேர்ந்திவன்
யாழறி வித்தக னறிந்தரு ளென்றலின்
இன்னுஞ் சென்றவ னன்ன னாகுதல்
நன்னுத லமர்தர நாடிக் காண்கெனப்
பின்னுஞ் சேர்ந்து பெருந்தகை யெமக்கிது
பண்ணுமை நிறீஇயோர் பாணிக் கீதம்
பாடல் வேண்டுமென் றாடமைத் தோளி
மறுத்துங் குறைகொள மறத்தகை மார்பன்
என்