கட் கிடந்த வெல்லா மற்றிவள் தன்கண் மதியிற் றான்றெரிந் துணர்ந்தனள் பெரிதிவட் கறிவெனத் தெருமந் திருந்திது வல்லுந னல்லே னல்லோய் நானென ஒருமனத் தன்ன வுற்றார்த் தேற்றா அருவினை யில்லென வறிந்தோர் கூறிய பெருமொழி மெய்யெனப் பிரியாக் காதலொ டின்ப மயக்க மெய்திய வெம்மாட் டன்புதுணை யாக யாதொன் றாயினும் மறாஅ தருளென வுறாஅன் போல அலங்குகதிர் மண்டில மத்தஞ் சேரப் புலம்புமுந் துறுத்த புன்கண் மாலைக் கருவி வானங் கால்கிளர்ந் தெடுத்த பருவம் பொய்யாப் பைங்கொடி முல்லை வெண்போது கலந்த தண்கண் வாடை பிரிவருங் காதற்குக் கரியா வதுபோல் நுண்சா லேக நுழைந்துவந் தாட ஆராக் காதலிற் பேரிசை கனியக் குரலோர்த்துத் தொடுத்த குருசி றழீஇ இசையோர் தேய வியக்கமும் பாட்டும் நசைவித் தாக வேண்டுதிர் நயக்கெனக் குன்றா வனப்பிற் கோட பதியினை அன்றாண்டு நினைத்தஃ தகன்ற பின்னர் நலத்தகு பேரியாழ் நரம்புதொட் டறியா இலக்கணச் செவ்விர லேற்றியு மிழித்தும் தலைக்கட் டாழ்வு மிடைக்க ணெகிழ்ச்சியும் கடைக்கண் முடுக்குங் கலந்த கரணமும் மிடறு நரம்பு மிடைதெரி வின்றிப் பறவை நிழலிற் பிறர்பழித் தீயாச் செவிச்சுவை யமிர்த மிசைத்தலின் மயங்கி மாடக் கொடிமுடி மழலையம் புறவும் ஆடமை பயிரு மன்னமுங் கிளியும் பிறவு மின்னன பறவையும் பறவா ஆடுசிற கொடுக்கி மாடஞ் சோரக் கொய்ம்மலர்க்

|