பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   297
Zoom In NormalZoom Out


 

வசதி யாடிய
மைதவழ் கண்ணி கைதவந் திருப்பாச்
செவ்வழி நிறீஇச் நெவ்விதிற் றம்மெனச்
செதுவன் மரத்திற் சேக்கை யாதலின்
உதவா திதுவென வுதயணள் மறுப்ப
யாணர்க் கூட்டத் தியவனக் கைவினை
மாணப் புணர்ந்ததோர் மகர வீணை
தரிசகன் றங்கைக் குரிதென வருளிய
கோல நல்லியாழ் கொணர்ந்தனள் கொடுப்பத்
தினைப்பக வனைத்தும் பழிப்பதொன் றின்றி
வனப்புடைத் தம்மவிவ் வள்ளுயிர்ப் பேரியாழ்
தனக்கிணை யில்லா வனப்பின தாகியு
நிணக்கொழுங் கோல்க ளுணக்குத லின்மையின்
உறுபுரிக் கொண்டன பிறநரம்பு கொணர்கென
மதுக்கமழ் கோதை விதுப்பொடு விரும்பிப்
புதுக்கோல் கொணர்ந்து பொருக்கென நீட்ட
நோக்கிக் கொண்டே பூக்கமழ் தாரோன்
வகையில விவையெனத் தகைவிரல் கூப்பி
அவற்றது குற்ற மறியக் கூறினை
இவற்றது குற்றமு மெம்மனந் தெளியக்
காட்டுதல் குறையென மீட்டவ ளுரைப்ப
நன்னுதன் மடவோய் நன்றல மற்றிவை
முன்னைய போலா மூத்து.........தைந்த
வாவிசா. . . . . . .ன வாயினும்
பண்ணறச் சுகிர்ந்து பன்னுத லின்மையும்
புகரற வுணங்கிப் புலவற லின்மையும்
குறும்புரிக் கொள்ளாது நெடும்புரித் தாதலும்
நிலமிசை விடுதலிற் றலைமயிர் தழீஇ
மணலகம் பொதிந்த துகளுடைத் தாதலும்
பொன்னே காணெனப் புரிமுறை நெகிழ்த்துத்
துன்னார்க் கடந்தோன் றோன்றக் காட்ட
யாழும் பாட்டும் யாவரு மறிவர்
வீழா ந