பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   299
Zoom In NormalZoom Out


 

மா நங்கை
ஆகந் தோய்தற் கவாஅ நெஞ்சமொடு
பாசிழை நன்கலம் பரிச முந்துறீஇக்
கேழ்கிளர் மணிமுடிக் கேகயத் தரசன்
அளவி லாற்ற லச்சுவப் பெருமகன்
மகதம் புகுந்து மன்னிய செங்கோற்
றகைவெந் துப்பிற் றருசகற் கிசைப்ப
ஏற்றெதிர் கொள்ளு மின்பக் கம்பலை
கூற்றெதிர் கொள்ளாக் கொள்கைத் தாகப்
புரவியும் யானையும் பூங்கொடித் தேரும்
விரவிய படையொடு தருசகன் போதரப்
போதுபிணைத் தன்ன மாதர் மழைக்கண்
நன்றொடு புணர்ந்த நங்கை மணமகன்
இன்றிவண் வருமென வில்லந் தோறும்
எடுத்த பூங்கொடி யிருங்கண் விசும்பகம்
துடைப்ப போல நடுக்கமொடு நுடங்கத்
தேர்செலத் தேய்ந்த தெருவுக ளெல்லாம்
நீர்செல் பேரியாறு நிரந்திழிந் தாங்குப்
பல்லோர் மொய்த்துச் செல்லிடம் பெறாஅ
தொல்லென் மாக்கட லுவாவுற் றன்ன
கல்லெ னகரங் காண்பது விரும்பி
மழைநிரைத் தன்ன மாடந் தோறும்
இழைநிரைத் திலங்க வேறி யிறைகொள
மலைத்தொகை யன்ன மாட மாநகர்
தலைத்தலைப் போந்து தலைப்பெய் தீண்டி
இடுமணி யானை யிரீஇ யிழிந்துதன்
தொடியணி தடக்கை தோன்ற வோச்சித்
தாக்கருந் தானைத் தருசகன் கழலடி
கூப்புபு பணிந்த கொடும்பூட் குருசிலை
எடுத்தவன . .