பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   301
Zoom In NormalZoom Out


 

தகைமலர்ப் பைந்தார்த் தருசகன் றன்னொடு்
பகைகொண் டொழுகும் பற்றாக் கொடுந்தொழில்
விடுகணை விற்றொழில் விரிசிக னுள்ளிட்
டடலருந் தோற்றத் தரிமா னன்னவர்
மத்தநல் யானை மதிய வெண்குடை
வித்தக நறுந்தார் விலங்குநடைப் புரவி்
அத்தின புரத்தி னரசரு ளரிமான்
வேண்டியது முடிக்கும் வென்றித் தானை
ஈண்டிய வாற்ற லெலிச்செவி யரசனும்
காண்டற் காகாக் கடன்மருள் பெரும்படைத்
தீண்டற் காகாத் திருந்துமதி லணிந்த
வாரண வாசி வளந்தந் தோம்பும்
ஏரணி நெடுங்குடை யிறைமீக் கூரிய
படைநவி றடக்கைப் பைந்தார்க் கருங்கழல்
அடவி யரசெனு மாண்டகை யொருவனும்
மலைத்தொகை யன்ன மையணி யானை
இலைத்தார் மார்பி னேரணி தடக்கைப்
பொருந்தா மன்னரைப் புறக்குடை கண்ட
அருந்திறற் சூழ்ச்சி யடல்வேற் றானை
அயிர்த்துணைப் பல்படை யயோத்தி யரசனும்
மாற்றோர்த் தொலைத்த கூற்றுறழ் கொடுந்தொழில்
மிக்குயர் வென்றியொடு வேந்தரை யகப்படுத்
தக்களம் வேட்ட வடலருஞ் சீற்றத்துப்
புனைமதி லோங்கிய போதன புரத்திறை
மிலைச்ச னென்னு நலத்தகை யொருவனும்
சீற்றத் துப்பிற் செருவெனப் புகலும்
ஆற்றல் சான்ற வரசரு ளரிமாத்
துன்னரு நீண்மதிற் றுவரா பதிக்கு இறை
மன்னரை முருக்கிய மதிய வெண்குடைப்