பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   302
Zoom In NormalZoom Out


 

பொங்குமலர் நறுந்தார்ச் சங்கர வரசனும்
மல்ல னென்னும் வெல்போர் விடலையும்
தானை மன்னரை மானம் வாட்டிய
ஊனிவர் நெடுவே லுருவக் கழற்காற்
பொங்குமயிர் மான்றேர்த் திருநகர்க் கிறைவன்
வெந்திறற் செய்கை வேசா லியுமென
அடற்றகை மன்னர் படைத்தொகை கூட்டிச்
சங்க மாகி வெங்கணை வீக்கமொடு
பகைநமக் காகிப் பணித்துத் திறைகொளும்
மகத மன்னனை மதுகை வாட்டிப்
புரிபல வியைந்த வொருபெருங் கயிற்றினிற்
பெருவலி வேழம் பிணித்திசி னாஅங்
கிசைந்த பொழுதே யிடங்கெட மேற்சென்
றருந்திறன் மன்னனை நெருங்கின மாகித்
தன்னுடை யானையும் புரவியுந் தன்றுணைப்
பொன்னியல் பாவையும் புனைமணித் தேரும்
அணிகதிர் முத்தமு மருங்கல மாதியும்
பணிமொழிச் செவ்வாய்க் கணிகை மகளிரொடு
பிறவு மின்னவை முறைமையிற் றரினும்
இருங்கண் மாதிரத் தொருங்குகண் கூடிய
கருமுகில் கிழிக்குங் கடுவளி போலப்
பொருமுரண் மன்னர் புணர்ப்பிடைப் பிரிக்கும்
அறைபோக் கமைச்சின் முறைபோக் கெண்ணினும்
அங்கண் ஞாலத் தழகுவீற் றிருந்த
கொங்கலர் கோதை யெங்கையைப் பொருளொடு
தனக்கே தருகுவன் சினத்தி னீங்கி
ஊனங் கொள்ளாது தானவட் பெறுகெனத்
தேறு மாந்தரை வேறவண் விடுத்துத்
தனித்தர வொரு