வரைத் தன்பாற் றாழ்ப்பினும் என்ன வாயினு மன்னது விழையா தொடுங்கி யிருந்தே யுன்னியது முடிக்கும் கொடுங்காற் கொக்கின் கோளின மாகிச் சாய்ப்பிட மாகப் போர்ப்படை பரப்பி வலிகெழு வேந்தனை வணக்குது மென்னத் தெளிவுசெய் தெழுந்து திருமலி நன்னாட் டெல்லை யிகந்து வல்லை யெழுந்து கடுந்தொழின் மேவலொ டுடங்குவந் திறுத்தலின் அகநகர் வரைப்பி னரச னறியப் புறநக ரெல்லாம் பூசலிற் றுவன்றி அச்ச நிலைமை யரசற் கிசைத்தலின் மெச்சா மன்னரை மெலிவது நாடித் தருசகன் றமரொடு தெருமர லெய்தி மாணகற் கண்டிந் நிலைமை கூறென ஆண நெஞ்சத் தயிரா பதிவந் தனங்கத் தானம் புகுந்தவற் கண்டு கூப்பிய கையினள் கோயிலுட் பட்டதும் கோற்றொடி மாதர் கொள்கையுங் கூற உகவை யுள்ளமொடு பகையிவ ணியைதல் கரும நமக்கென வுருமண் ணுவாவுரைத் தின்ன தென்னான் பொன்னேர் தோழிக் கிருமதி நாளகத் திலங்கிழை மாதர் பருவரல் வெந்நோய் பசப்பொடு நீக்குவென் என்றன னென்பதைச் சென்றனை கூறிக் கவற்சி நீக்கெனப் பெயர்த்தவட் போக்கிக் கடுத்த மன்னரைக் கலங்கத் தாக்கி உடைத்த பின்றை யல்லது நங்கையை அடுத்தல் செல்லா னரச னாதலின் அற்ற நோக்கி யவர்படை யணுகி ஒற்றி மேல்வீழ்ந் துடைக்கு முபாயமா வா

|