பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   304
Zoom In NormalZoom Out


 

ணிக வுருவின மாகி மற்றவர்
ஆணத் தானை யகம்புக் காராய்ந்
திரவிடை யெறிந்து பொருபடை யோட்டிக்
கேட்போர்க் கெல்லாம் வாட்போர் வலித்தொழில்
வளமிகு தானை வத்தவர்க் கிறையைக்
கிளைமை கூறி யுளமை கொளீஇக்
காவினு ணிகழ்ந்தது காவலற் குரைப்பின்
மன்றல் கருதி வந்த மன்னற்
கொன்றுபு கொடாமை யுண்டு மாகும்
ஒன்றின னாயிற் பொன்றுஞ் சிளமுலைத்
தெரியிழை மாத ருரிமையி னோடாள்
அன்ன தாத லொருதலை யதனாற்
பின்னரு மதற்குப் பிறபிற நாடுதும்
இன்னே யெழுகென் றெழுந்தாங் கணைஇச்
சின்னச் சோலை யென்னு மலைமிசைப்
பன்னற் கேள்வி பண்வரப் பாடிட
எண்ணிய கருமத் திடையூ றின்மை
திண்ணிதிற் கேட்டுத் தெளிந்தன ராகி
ஆனா வன்பொடு மேனா ளன்றி
லழிவழி வந்த கழிபெருங் காதற்
பகையடு படைநரைத் தொகையவட் காண்புழி
நூற்றிற முற்றி யாற்றுளி பிழையா
தாற்றி னறிய வத்துணை யுண்மையின்
ஊறின் றினியென வுவகையிற் கழுமிக்
கரப்பில் வண்மைப் பிரச்சோ தனன்றன்
சினப்படை யழித்த செம்ம லாளர்க்குக்
கனப்படை காக்கைத் தொகையெனக் கருதும்
அத்திறத் தொன்றி யெத்திறத் தானும்
குவளை யுண்க ணிவளொடு புணர்ந்த
காலை யல்லது கோலக் குருசில்
புலம்பிற் றீரா னாதலிற் பொருபடை
கலங்கவாட் டுதலெனக் கருத்திடை வலித்து
மலையி னிழிந்து விலைவரம் பறியா
அருவிலை நன்மணி போத்தந் தவ்வழிப்