பெருவிலைப் பண்டம் பெய்வது புரிந்து செழுமணிக் காரர் குழுவினுட் காட்டி உறுவிலை கொண்டு பெறுவிலை பிழையா வெண்பூந் துகிலுஞ் செம்பூங் கச்சும் சுரிகையும் வாளு முருவொடு புணர்ந்த அணியின ராகிப் பணிசெயற் குரிய இளையரை யொற்றித் தளைபிணி யுறீஇப் பல்லுறைப் பையி னுள்ளறை தோறும் நாகத் தல்லியு நயந்ததக் கோலமும் வாசப் பளிதமுஞ் சோணப் பூவும் குங்குமக் குற்றியுங் கொழுங்காற் கொட்டமும் ஒண்காழ்த் துருக்கமு மொளிநா குணமும் காழகி னூறுங் கட்சா லேகமும் கோழிரு வேரியும் பேரில வங்கமும் அந்தண் டகரமு மரக்கு மகிலும் சந்தனக் குறையொடு சாந்திற் குரியவை பிறவு மொருவா நிறைய வடக்கி முதிர்பழ மிளகு மெதிர்வது திகழ்ந்த மஞ்சளு மிஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும் தலைப்பெருங் காயமு நலத்தகு சிறப்பின் சீரகத் தரிசியு மேலமு மேனைக் காயமு மெல்லா மாய்வன ரடக்கி அஞ்சன மனோசிலை யணியரி தாரம் துத்த மாஞ்சி யத்தவத் திரதம் திப்பிலி யிந்துப் பொப்புமுறை யமைத்துத் தாழி மேதை தவாத துவர்ச்சிகை வண்ணிகை வங்கப் பாவையோ டின்ன மருத்துறுப் பெல்லா மொருப்படுத் தடக்கி இலைச்சினை யொற்றிய தலைச்சுமைச் சரக்கினர் நான மண்ணிய நீனிறக் குஞ்சியர் மணிநிறக் குவளை யணிமலர் செரீஇ யாப்புற வடக்கிய வாக்கமை சிகையினர் மல்லிகை யிரீஇ வல்லோர் புணர்ந்த செம்பொன் மாத்திரை செரீஇய

|