காதினர் அங்கதிர்ச் சுடர்மணி யணிபெற விரீஇ மாசின் றிலங்கு மோதிர விரலினர் வாச நறும்பொடி திமிர்ந்த மார்பினர் மகரிகை நிறைய வெகிர்முக மாக்கிப் பாடி மகளிர் விழையுஞ் சேடொளிப் பத்திக் கடிப்பும் பவழத் திரியும் முத்து வடமு முழுமணிக் காசும் பன்மணித் தாலியு மென்முலைக் கச்சும் உத்திப் பூணு முளப்படப் பிறவும் சித்திரக் கிழியின் வித்தக மாகத் தோன்றத் தூக்கி யாங்கவை யமைத்து நாற்றிய கைய ரேற்றிய கோலமொடு நுரைவிரித் தன்ன நுண்ணூற் கலிங்கம் அரைவிரித் தசைத்த வம்பூங் கச்சொடு போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத் தசைஇப் பொற்றொடி நிறைக்கோல் பற்றிய கையினர் கழலுங் கச்சுங் கலிங்கமு மற்றவர் விழைவன வறிந்து வேறுவே றடக்கிக் காட்சிமுந் துறுத்த மாட்சிய ராகிப் படைத்திற மன்னர் பாடி சார்ந்து விடைப்பே ரமைச்சன் மேனாட் போக்கிய அறிவொடு புணர்ந்த விசைச்சனு மவ்வழிக் குறிவயிற் பிழையாது குதிரையொடு தோன்றலும் அதிராத் தோழனை யவணே யொழித்துக் குதிரை யாவன கொண்டுவிலை பகரிய வழவில் சூழ்ச்சி வயந்தக குமரனைக் குழுவினோர் கட்குத் தலையெனக் கூறி வெம்முரண் வென்றியொடு மேல்வந் திறுத்த ஒன்னா ராடற் கொருப்பா டெய்தி வழக்கொடு புணர்ந்த வாசி வாணிகம் உழப்பே மற்றிவ னொன்பதிற் றியாட்டையன் மண்டமர்த்

|