பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   307
Zoom In NormalZoom Out


 

தானை மகத மன்னனும்
பண்டையன் போலா னாதலிற் படையொடு
தொன்னகர் வரைப்பக மெந்நக ராக்க
இருந்தனம் வலித்தனம் யாமெனப் பலவும்
பொக்க முடையவை பொருந்தக் கூறிப்
பகைகொண் மன்ன னகநகர் வரைப்பின்
யாவ ராயினு மறிந்துவந் தடைவது
காணுங் காலைக் கரும நமக்கெனக்
கணங்கொண் மன்னரு மிணங்குவன ராகிப்
பெரும்பரி சார மொருங்குட னருளி
அற்ற மவர்மாட் டொற்றின ராகி
அருத்த மருங்கல நிரைத்தனர் தந்திட்
டின்றைக் கொண்டு மிவணி ராமினென்
றொன்றிய காதலோ டுண்ணெகிழ்ந் துரைப்ப
வத்தவ ரிறைவனொடு மொய்த்திறை கொண்டு
பாடியுட் டமக்கிடம் பாற்படுத் தமைத்து
வீட்டின தளவும் விறற்படை வீரமும்
கூட்ட மன்னர் குறித்தவும் பிறவும்
இருளும் பகலு மருவின ராராய்ந்
தருந்திற லாள ரொருங்குயி ருண்ணும்
கூற்றத் தன்ன வாற்றல ராகி
மண்டில மறைந்த மயங்கிருள் யாமத்
தெண்டிசை மருங்கினு மின்னுழி யெறிதுமென்
றறியச் சூழ்ந்த குறியின ராகி
நூலிற் பரந்த கோல வீதியுட்
படைநகர் வரைப்பகம் பறைக்க ணெருக்கிப்
பாடி காவல ரோடியாண் டெறிந்து
புறக்காப் பமைத்துத் தலைக்காப் பிருக்கும்
வல்வில் லிளையர்க் கெல்லை தோறும்
காப்புநன் கிகழன்மின் கண்படை யுறந்தென்
றியாப்புறக் கூறி யடங்கிய பொழுதிற்
கலங்கத் தாக்கலின் மெலிந்த தாகி
உடை