யினு முடையா தாயினும் யாவரும் அடையுந் தான மறியக் கூறி நாற்பால் வகுத்து மேற்பா லமைத்துக் காவலன் றன்னையுங் காவலு ணிறீஇப் பொற்படைப் புரவி பொலிய வேறி நற்படை நலியா நன்மையொடு பொலிந்த சாலிகைக் கவயங் கோல மாகப் புக்க மெய்யினர் பூந்தார் மார்பிற் றாளாண் கடுந்திறல் விரிசிகன் வாழ்கென மேலாண் மல்லன் பாடி காத்த நீலக் கச்சை நிரைகழன் மறவரை வேலிற் சாய்த்துங் கோல மான்றேர் அடவி வாழ்கென வார்த்தன ருராஅய்த் தடவரை மார்பிற் றளராச் செங்கோல் மிலைச்சன் வாழ்கெனத் தலைக்காப் பிருந்த தண்ட மள்ளரைத் தபுத்துயி ருண்டும் கொண்ட வார்ப்பொடு கூட வெலிச்செவி பண்டரும் பல்லியம் பாற்படத் துவைத்தும் விறல்வே சாலி பாடி குறுகி அடலருஞ் சீற்றத் தரசுபல கடந்த விடலரும் பைந்தார் வேந்தருள் வேந்தன் சங்கரன் வாழ்கெனத் தங்கல ரெறிந்தும் வத்தவன் கொண்ட மாமுர சியக்கி அயிலிற் புனைந்த வெயில்புரை யொள்வாள் உரீஇய கைய ராகி யொரீஇக் காவன் மறவரைக் கண்படை யகத்தே வீழ நூறி வேழந் தொலைச்சி மலையெனக் கவிழ மாமறித் திடாஅக் கொலைவினைப் படைமாக் கொடியணி நெடுந்தேர் வத்தவன் மறவர் மொய்த்தன ரெறியக் கடுவளி யுற்ற கடலி னுராஅய் அடலரும் பெரும்படை யார்ப்பொடு தொடங்கித் தம்முட் டாக்கிக் கைம்மயக் கெய்தி மதக்களி யானை வத்தவன் வாழ்கவென் றுரைப்ப மற்றவ

|