பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   309
Zoom In NormalZoom Out


 

ரறிந்தன ராகி
எம்வயி னெம்வயி னெண்ணினர் கோளெனத்
தம்வயிற் றம்முளுந் தெளியா ராகிப்
பாடி யருங்கலம் பட்டுழிக் கிடப்ப
நீடிரு ளகத்து நீங்குதல் பொருளெனச்
செவிசெவி யறியாச் செயலின ராகித்
தவிர்வில் வேகமொடு தலைவந் திறுத்த
கடுந்தொழின் மன்ன ருடைந்தன ரோடி
அடைந்தனர் மாதோ வரணமை மலையென்
அரணமை பெருமலை யடைவது பொருளென
முரணமை மன்னர் முடுகிய பின்னர்
ஆளூறு படாமைக் கோளூறு புரிந்த
செம்ம லாளர் தம்முட் கூடி
ஒன்னா மன்னரை யோட்டின மாதலின்
மின்னேர் சாயலை மேயநம் பெருமகற்
காக்க முண்டெனுஞ் சூழ்ச்சியோ டொருபால்
புலர்ந்த காலை மலர்ந்தவ ணணுகிக்
களங்கரை கண்டு துளங்குபு வருவோர்
மகத மன்னற் குகவை யாகக்
கோடாச் செங்கோற் குருகுலத் தரசன்
ஓடாக் கழற்கா லுதயண குமரன்
கோயில் வேவினு ளாய்வளைப் பணைத்தோட்
டேவி வீயத் தீரா வவலமொடு
தன்னா டகன்று பன்னாடு படர்ந்து
புலம்பிவட் டீர்ந்து போகிய போந்தோன்
சலந்தீர் பெரும்புகழ்ச் சதானிக வரசனும்
மறப்பெருந் தானை மகத மன்னனும்
சிறப்புடைக் கிழமை செய்ததை யறிதலின்
அகப்பாட் டண்மைய னல்லதை யிகப்பத்
தாதலர் பைந்தார்த் தருசக னமக்கு
வேறல னவனை வென்றியி னீக்கி
மாறுசெயற் கிருந்த மன்னரை