சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   58
Zoom In NormalZoom Out

ன ராகி யாயிடை
நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார்.
 
240.உள்ளுணின் றொலிபுறப் படாத தொண்சிறைப்
புள்ளுமல் லாதவும் புகாத நீரது
வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை
வள்ளறன் மந்திரச் சாலை வண்ணமே.
 
241.ஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன்
பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின்
வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட
ஈங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே.
 
242.மண்ணியல் வளாகங் காக்கு மன்னரால் வணக்க லாகாப்
புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட
நுண்ணிய நூலி னன்றி நுழைபொரு ளுணர்தல் செல்லாது
எண்ணிய துணர்ந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே.
 
243.வால்வளை மறலி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்
கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும்
மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்க நின்றார்
நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர்.
 
244.சுற்றுநின் றெரியுஞ் செம்பொன்