சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   60
Zoom In NormalZoom Out

மன்னர் வையகம் வணக்கும் வாயில்
தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும்
ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும்
கோள்வலிச் சீய மொய்ம்பின் சூழ்ச்சியே குணம தென்றான்.
 
249.ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாஞ்
சூழ்பவர் சூழ்ந்து சூழும் சூழ்ச்சியுட் டோன்று மன்றே
யாழ்பகர்ந் தனைய தீஞ்சொ லமிழ்தனா ரேனுஞ் சூழ்ச்சி
வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே.
 
250.ஆற்றல்மூன் றோதப் பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க
ஆற்றறான் சூழ்ச்சி யென்ப வாதலா லதனை யாயும்
ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும்
ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே.
 
251.வடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க்
கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரச வாழ்க்கை
கடந்தவழ் கடாத்து வேழங் களித்தபின் கல்வி மாணா
மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர்
                              வகையிற்றாமே.
 
252.சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை
தந்திர மறி