சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   61
Zoom In NormalZoom Out

ந்து சூழ்வான் ஆழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும்
மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து
தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே.
 
253.எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனும்
அடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல
வடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சி
கொடுத்தவா நிலைமை மன்னர் குணங்களாக் கொள்ப
                                       வன்றே.
 
254.மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராய
பன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந் துரைப்ப தென்னை
என்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே
இன்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான்.
 
255.கொங்குடை வயிரக் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட்
                                        டாங்கு
நங்குடி விளக்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான்
தங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான்
சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லானே.