| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 62 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 256. | இறையிவை
மொழியக் கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி அறைகழ லரவத் தானை யணிமுடி யரச ரேறே நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார். |
| 257. | பணிந்துமற்
றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித் துணிந்துதன் புலமை தோன்றச் சுச்சுதன் சொல்ல லுற்றான் இணைந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற அணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே. |
| 258. | பொழிற்கதிர்
பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறுந் தொழிற்கதிர்க் கடவு டோன்றச் சூரிய காந்த மென்னும் எழிற்கதிர்ப் பிறங்கல் வட்ட மெரியுமிழ்ந் திடுவ தன்றே அழற்கதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே. |
| 259. | கோணைநூற்
றடங்க மாட்டாக் குணமிலார் குடர்க ணைய ஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலே பேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல் பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப வென்றான் |
| 260. | சூழ்கதிர்த்
தொழுதி மாலைச் சுடர்ப்பிறைக் கடவு டோன்றித் தாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்தி |