சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   63
Zoom In NormalZoom Out

ர காந்த மென்னும்
வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே
போழ்கதிர் பொழிந்து பொங்கிப் புலானிணம் பொழியும்
                                       வேலோய்.
 
261.கண்ணளித் துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டு
தண்ணளித் தயங்குஞ் செங்கோற் றாரவர் தவத்தி னாலே
மண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான்
விண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி
                                       னாற்கே.
 
262.கண்ணியல் கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுத்
தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்
புண்ணியக் கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்
மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே.
 
263.நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்
இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ
மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயி்ன்
அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே.
 
264.மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள்
விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு
                                         மாயிற்
கண்குளிர் கொள்ளப் பூக்குங்