சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   64
Zoom In NormalZoom Out

கடிகயத் தடமுங் காவும்
தண்குளிர் கொள்ளு மேனுந் தாமிக வெதும்பு மன்றே.
 
265.தீயினப் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற்
போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே
வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய்
மாயினம் படர்வ தெல்லாம் வையகம் படரு மன்றே.
 
266.மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட
இறந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்
அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்
சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்.
 
267.ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யொருமை யாலே
திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப
                                         நோக்கி்
இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப்
பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே.