| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 65 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 268. | கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி
காமர் விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார் எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின் மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னோ. |
| 269. | குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு
நீர்சூழ் படிமிசை யில்லை யாயின் வானுள்யார் பயிறு மென்பார் முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி அடிமிசை யறையுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே. |
| 270. | தண்சுடர்க் கடவுள் போலத் தாரகைக் குழாங்க
டாமே விண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய் கண்சுடர் கனலச் சீறுங் கடாமுகக் களிற்று வேந்தே. |
| 271. | அருந்தவ மரச பார மிரண்டுமே யரிய
தம்மை வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும் திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிற் றிரியு மாயிற் பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய். |