சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   66
Zoom In NormalZoom Out

272.அந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி
இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின்
மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல்
தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான்.
 
273.மரந்தலை பிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்ற
முரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும்
அருந்தவ மரைச பார மவைபொறை யரிது கண்டாய்
இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான்.
 
274.உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து
விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர்
கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம்
எரிதவழ்ந் திலங்கு வேலோ யெண்ணுவ தெண்ண மென்றான்.
 
275.பஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து
மஞ்சில்நின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும்
அஞ்சிநின் றனலும்