சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   69
Zoom In NormalZoom Out

கிற்
புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண்
இரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே.
 
286.வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி
முளைத்தெழு காம முடிவில ராகித்
திளைத்தலி னன்னகர் தெய்வ வுலகம்
களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே.
 
287.ஆடலர் கொம்பனை யாரிளை யாடவர்
பாடக மெல்லேர் பரவிய சீறடி
தோடலர் தொங்கலங் குஞ்சியுட் டோயவைத்
தூட லுணர்த்துந் தொழிலதொன் றுண்டே.
 
288.சிலைத்தடந் தோளவர் செஞ்சாந் தணிந்த
மலைத்தட மார்பிடை மைமதர்க் கண்ணார்
முலைத்தடம் பாய முரிந்து முடவண்
டிலைத்தடத் தேங்கு மிரக்க முளதே.
 
289.வனைந்தன போலும் வளர்ந்த முலையா
ரினைந்துதங் காதல ரின்பக் கனிகள்
கனிந்து களித்தகங் காமங் கலந்துண
முனிந்து புருவ முரிவ பலவே.
 
290.செவ்வாய்ப் பவழக் கடிகைத் திரளெனும்
அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர்
ஒவ்வா தி