சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   70
Zoom In NormalZoom Out

ளைப்ப ரொசிந்தன ரோடரி
மைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே.
 
291.வளர்வன போலு மருங்குல்க ணோவத்
தளர்வன போலவர் தாமக் குழன்மேற்
கிளர்வன போதிள வாசங் கிளைத்துண்
டுளர்வன போதரு மூதை யுளதே.
 
292.பஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலைச்
செஞ்சாந் தணிந்து திகழ்ந்தமணி வண்டு
மஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற்
கஞ்சா வொளிக்கு மயல ததுவே.
 
293.பாசிலை மென்றழைப் பள்ளியுட் பாவையர்
தூசினு ணின்று சொரிமணிக் கோவையும்
பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை
மூசின வண்டின மொய்பொழி லெல்லாம்.
 
294.காமவி லேகையுங் கற்பக மாலையும்
சேம மணிநகைச் செப்பினு ளேந்துபு
தூமக் குழலவர் தூது திரிபவர்
தாமத் தெருவிடை தாம்பலர் கண்டாய்.
 
295.தாமத் தொடையல் பரிந்து தமனிய
வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள்
காமக் கடலைக் கலக்குங் கழலவர்
தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே.
 
296.பொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னனைய மாண்பின
மன்னவன் மயூர கண்டன் மற்றவன் றேவி மாருள்
மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றாள்
அன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான்
 
297.அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ