சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   71
Zoom In NormalZoom Out

னென்னும்
பொதியவிழ் பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி
                                         யெய்தி்
மதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும்
கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே,
 
298.சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்க் திகிரி யாளும்.
கொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை யாலும்
கற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும்
வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை
                                     வேந்தே.
 
299.தம்பியர் நீலத் தேரோன் தயங்குதார் நீல கண்டன்
வம்புயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும்
தும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள்
                                       கண்டாய்
வெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார்.
 
300.படையின தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண்
புடையவ ரவனோ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே
விடையமொன் றின்றி வென்ற விரிசுட ராழி யாளும்
நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான்.
 
301.ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தாற்றல்
கோணைநூற்