சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   73
Zoom In NormalZoom Out

றங்க ளெல்லா மறிதியா லாணை வேந்தே
தீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான்.
 
306.மற்றவற் குரிய ணங்கை யென்பதென் மனத்தி னோடும
உற்றுவந் துளது சால வுறுதியு முடைய தொக்கும்
வெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண்
கொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது குணங்கொ
                                     லென்றான்.
 
307.தொடர்மணி மருங்கிற் பைங்கட் சுளிமுகக் களிநல் யானை
அடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னிச்
சுடர்மணிப் பூணி னாற்குச் சுச்சுதன் சொல்லக் கேட்டே
படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான்.
 
308.நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான்
மேலா ராயு மேதைமை யாலு மிகநல்லான்
தோலா நாவிற் சுச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்
வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலும்.
 
309.தேனும் வண்டுந் தீதில பாடுஞ் செறிதாரோ
யானுங் கண்டே னச்சுவ கண்டன் றிறமஃதே
மானங் கொண்ட மாரதர் போரே றனையாயோர்
ஊனங்கண்டே னொட்டினு மொட்டே னுரைக்குற்றேன்.
 
310.மானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணி
நானக் கோதை நங்கை பிறந்த நாளானே
வானக் கோளின் மாண்புணர்