சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   78
Zoom In NormalZoom Out

வன் கோலக் குங்குமக் குவவுத் தோளான்
செற்றவர்ச் செகுக்குஞ் செய்கைச் செருவல்லான் சிங்க கேது
மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான்,
 
329.இஞ்சிசூ ழெரிபொன் மாடத் திந்திரன் மிசைந்த நாமச்
சஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம்
அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண்
மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா!.
 
330.ஈங்கிவர் தம்முள் யாவ ரிலங்கிடும் பவழச் செவ்வாய்க்
கோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுக் குரிய காளை
ஆங்கவன் றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான்
வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான்.
 
331.மன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளி
துன்னு சேவடி யாற்குச் சுருங்கவே
பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும்
அன்ன தேயென் றவர்களு மொட்டினார்.
 
332.அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும்
வல்லி யாங்கணி சாந்தும் வனைந்துராய்
மல்லி னான்மலி மார்பற்கு மற்றிவை
சொல்லி னான்சுத சாகர னென்பவே.
 
333.ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல்
பாழி யாகின்ற திண்டோட் பவச்சுதன்
சூழி யானையி னாய்சொலப் பட்டன
ஊழி யாருரை யொத்துள கண்டாய்.
 
334.ஆயி னுஞ்சிறி துண்டணி வண்டினம்
பாயி னும்பனி