சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   79
Zoom In NormalZoom Out

க் கும்படர் கோதைதன்
வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர்
தோயி னும்பகை யாஞ்சுடர் வேலோய்.
 
335.வண்ட வாமுடி மன்னருண் மற்றவன்
தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி
துண்டி யானுரைப் பானுறு கின்றது
விண்டு வாழுநர் மேனகு வேலினாய்.
 
336.போக மாண்டவிச் சேடியோர் பொன்னகர்க்
கேக நாயக னாயினி தாள்பவன்
மேக வாகன னென்றுளன் வீழ்மத
வேக மால்களி றும்மிகு வேலான்.
 
337.நாக மலைகண் மேனகு வண்டினம்
ஏக மாலைய வாயொலி கைவிடாத்
தோகை மாமயில் போற்சுரி கூந்தலாள்
மேக மாலினி யென்றுள மிக்குளாள்.
 
338.தேவி மற்றவ டெய்வம் வழிபட
மேவி வந்தனன் விச்சுவ னென்பவன்
ஓவி றொல்புக ழானுளன் கூற்றமு
மேவி நின்றினி தாண்டிடு மீட்டினான்.
 
339.மையில் வானுல காண்டுமண் ணோர்களுக்
குய்யும் வாயி லுணர்த்திய தோன்றிய
ஐய னாற்பிற வாரஞர் நீங்கியி்வ்
வைய மாயதெ லாம்வளர் கின்றதே.
 
340.மங்குல் வானுல காண்டு வரத்தினால்
இங்கு வந்தன னீண்டளி யீந்தபிற்
றிங்கள் வாளொளி யிற்றி