சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   81
Zoom In NormalZoom Out

குறிப்பறிந் திவைக ளெல்லாம்
அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி
நங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ ராவான்
தொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல
                                      லுற்றான்.
 
348.அண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற்
கெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யிகத்த லாற்றாக்
கண்ணலங் கவரும் வேலோர்க் கீவதுங் கரும மன்றால்
பெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே.
 
349.சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர காந்த மாளும்
தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன்
போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் குரிமை செய்வ
தாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய்.
 
350.மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி
அங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண்
பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற
                                     போழ்தும்
தங்கிய மனத்த னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான்.
 
351.மண்கணை முழவ மேங்க மடந்தையர் நுடங்கு மாறும்
பண்கனிந் தினிய பாடற் பாணியும் பயின்று மேவான்
விண்கனிந் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து