| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 84 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| தாழ்புரி
தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வற்றால் யாழ்புரி மழலை யாள்கண் ணாவதை யறிது மென்றான். | |
| 360. | என்றவன்
மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கி மின்றவழ் விளங்கு வேலோய் மெய்யிது மேவல் வேண்டில் சென்றவன் மனையு ணீயே வினவெனச் சேனை வேந்தன் நன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான். |
| 361. | இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல்
வேண்டா மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா சந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றி அந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார். |
| 362. | மந்திரக்
கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன் சுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப வந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச அந்தரக் கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான். |
| 363. | மிகுகதிர்
விலங்கலார் வேந்தன் றேனுடைந் துகுகதிர் மண்டப மொளிர வேறலும் தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி நகுகதிர் மண்டில நடுவு நின்றதே. |
| 364. | கண்டிரள்
கழைவளர் கரும்பு கைமிகுத் தொண்டிரள் வெ |