| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 87 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| வள்ளிதழ்
மல்லிகை மலர்ந்த மாலையன் அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல் கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான். | |
| 375. | பொன்னவிர்
மணிக்கழல் புலம்பத் தேனினம் துன்னலர் தொடையலிற் சுரும்பொ டார்த்தெழ மன்னவ னடத்தொறு மகர குண்டலம் மின்மலர்ந் திலங்குவில் விலங்க விட்டவே. |
| 376. | நெய்யிலங்
கெஃகினர் நிறைந்த விஞ்சையர் கையிலங் கீட்டியர் கழித்த வாளினர் மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர் வையகங் காவலன் மருங்கு சுற்றினார். |
| 377. | சுரும்புசூழ் பிணையலுஞ்
சுண்ண மாரியும் கரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழ நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான். |
| 378. | எங்குலம்
விளங்கவிங் கருளி வந்தவெங் கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென |