| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 92 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| புலங்கிளர்
பொறிநுகர் விலாத புண்ணியன் நலங்கிளர் திருமொழி நாத னென்பவே. | |
| 397. | ஆங்கவன் றிருவரு
ளலரச் சூடிய வீங்கிய விரிதிரை வேலி காவலன் ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான் பாங்குயர் பருதிவேற் பரத னென்பவே. |
| 398. | ஆழியா
லகலிடம் வணக்கி யாண்டவன் பாழியா னவின்றதோட் பரத னாங்கொர்நாள் ஊழியா னொளிமல ருருவச் சேவடி சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான். |
| 399. | கதிரணி
மணிமுடி வணங்கிக் காவலன் எதிரது வினவினா னிறைவன் செப்பினான் அதிர்தரு விசும்பிடை யமிழ்த மாரிசோர் முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே. |
| 400. | என்முத
லிருபத்தீ ரிருவர் நாதர்கள் நின்முத லீரறு வகையர் நேமியர் மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர் தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே. |